Thursday, November 13, 2008

காலத்தின் தேவைகருதிய செயற்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் - கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு


காலத்தின் தேவைகருதிய செயற்திட்டங்கள் விரைவுபடுத்தப்படும் - கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு

புதன், 12 நவம்பர் 2008, 12:44 மணி தமிழீழம் [பதிவு நிருபர்]

கடந்த நவம்பர் 1ஆம் நாள் சனிக்கிழமை, ரொரன்ரோ ஐயப்பன் கலாச்சார மண்டபத்தில் 75 ஊர்ச் சங்கங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் என இணைந்து நடாத்திய புலத்தின் இணைவால் தளத்திலுள்ள உறவுகளின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்ய நடாத்திய "அரவணைப்போம்" நிகழ்வினூடாக $ 35750.00 கனடிய டொலர்கள் திரட்டப்பட்டு மக்கள் நிவாரணத்திற்கென C.A.R.E Program இடம் கையளிக்கப்பட்டுள்ளது என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு அறியத்தருகிறது. குறுகிய கால அவகாசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட "அரவணைப்போம்" நிகழ்வு பல சவால்களுக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்றதாக கடந்த நவம்பர் 9ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைப்புக்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பலரும் கருத்து வெளியிட்டனர். அதேவேளை ஒருங்கமைப்பில் குறிப்பாக நிகழ்ச்சி ஒருங்கமைப்பில் ஏற்பட்ட சவால்கள் அடையாளம் காணப்பட்டு அவை குறித்து எதிர்கால நிகழ்வுகளில் அதீத கவனம் செலுத்துவது எனவும் அக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அரவணைப்போம் நிகழ்வு தொடர்பாக இன்னும் பணம் அளிக்க விரும்புவோர் அதனை C.A.R.E Program இடம் நேரடியாக கையளிக்குமாறும், அவ்விபரத்தை 416-286-1307 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு அறியத்தருமாறும் வேண்டப்படுகின்றீர். கடந்த காலத்தில் உரிமைக்குரல், சாவிலும்லும் வாழ்வோம், மாமனிதர் சிவநேசன் வணக்க நிகழ்வு, பொங்கு தமிழ், குருதிக்கொடை போன்ற பல கனடியத் தமிழர் பெரு நிகழ்வுக்ளில் இணைந்து காத்திரமான பங்களிப்பை ஊர்ச் சங்கங்கங்கள், பழைய மாணவர் அமைப்புக்கள், தமிழர் பொது அமைப்புக்கள் செய்திருந்ததை நினைவு கூர்ந்த நவம்பர் 9ஆம் நாள கூட்டம், இன்றைய காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு தாயக உறவுகளுக்கு வலுச்சேர்கின்ற செயற்திட்டங்களை அடையாளம் கண்டு உடன் தொடர்ந்தும் அமுல் நடத்துவதெற்கென ஒரு குழுவையும் அடையாளம் கண்டது.ஒரு வாரத்தினுள் அக்குழு அடையாளம் கண்டு வெளிப்படுத்தும் செயற்திட்டங்களை அமுல்நடத்த அனைவரும் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும், உறுதியாகவும் உழைப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயற்பட விரும்புகின்ற இதுவரை இணைந்துகொள்ளாத அமைப்புக்கள் 647-205-7301 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் கனடிய சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

No comments: