தமிழக அரசியற் தலைவர்கள், பத்திரிகைகள், வார, மாத சஞ்சிகைகள், சினிமா நடிகர்கள், தொலைக்காட்சி நடிகர்கள் சினிமா தொழிலாளர்கள், தொலைக்காட்சி தொழிலாளர்கள், மாணவ அமைப்புக்கள், மகளிர் அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள், சட்டத்தரணிகள், டாக்டர்கள், தனிமனிதர்கள் என்றெல்லாம் தமிழகமே ஈழத் தமிழரின் துயர் துடைக்க பொங்கி எழுந்துள்ளது, உலகெங்கும் உள்ள தமிழருக்கு ஆறுதல் அளிக்கிறது. உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனும் இவர்கட்கு நன்றி சொல்ல வேண்டும்.
சிங்களத்தின் போர் நிறுத்த மறுப்பும், மஹிந்தவின் போர் தொடர்வதற்கான டெல்லி அறைகூவலும், ரணிலின் நயவஞ்சக டில்லி வழிமொழிவும், தமிழக மக்களுக்கு மட்டுமல்ல உலகத்தமிழர்களுக்கு சிங்களத்தால் செய்யப்பட்ட அவமானமே.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வை.கோ அவர்கள் சொல்வது போல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன் அவர்கள் சொல்வது போல், தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் சொல்வது போல், பாரதிய ஜனதா கட்சி இல கணேசன் அவர்கள் சொல்வது போல், பாட்டாளி மக்கள் கட்சி, டாக்டர் ராமதாஸ் அவர்கள் சொல்வது போல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தோழர் திருமாவளவன் அவர்கள் சொல்வது போல், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சின்னசாமி அவர்கள் சொல்வது போல், அடுத்த படி நடவடிக்கை என்ன? எனும் கேள்விக்கான பதிலும் தலைவர் கலைஞர் அவர்களின் சாணக்கியத்தாலேயே முடிவு செய்யப்பட வேண்டும்.
உதாரணமாக ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை தமிழகச் சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அங்கீகரித்தால், அதுவே அவர்களின் நிரந்தர நிம்மதியான வாழ்வுக்கு தொடக்கப் புள்ளியாகும். தமிழீழத்தை தமிழ்நாடு அங்கீகரித்தால் மத்திய ஆட்சியில் தமிழகத்தின் பலம் இந்தியா தமிழீழத்தை அங்கீகரிக்க வைக்கும். இவ்வாறான அங்கீகாரத்தின் தொடர் நிகழ்வாக உலகம் முழுவதுமே தமிழீழத்தை அங்கீகரிக்கும்.
தமிழக எழுச்சியும் எங்கள் பங்கும் பணியும்
நாங்கள் தமிழக எழுச்சியை வலுப்படுத்தவும், எமக்கு ஒரு பெருநம்பிக்கையை ஏற்படுதிக் கொண்டிருக்கும் தமிழகத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகட்கும், செயற்பாட்டாளர்கட்கும் நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்ளவும் குறிப்பாக புலம் பெயர்ந்து (கனடாவில்) வாழும் மக்களாகிய நாங்கள் செய்யக்கூடிய சில செயற்பாடுகளை கனடிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு அண்மையில் அறிவித்துள்ளது.
1) இந்திய மத்திய அரசிற்கு பல்லினசமூகத்தவர்கள் கையெழுத்திட்ட ஈழத்தமிழர்கட்கு ஆதரவு வேண்டிய கையெழுத்தொகுதி மனு, கனடாவில்லுள்ள இந்திய தூதராலயத்தில் கையளித்தல்.
2) ஓவ்வொரு அமைப்பும் தத்தம் அமைப்புகள் சார்பாக நன்றி தெரிவிக்கும் மடலினை தமிழகத்தில் இருக்கும் அரசியற் கட்சிகள் தலைவர்கள், பிரதான ஊடகங்கள் ஆகியவ்ற்றிக்கு தனித்தனியே அனுப்புதல்.
3) எல்லா அமைப்பு மக்களும் கூட்டாக தத்தம் அமைப்புகள் சார்பாக ஈழ தமிழரின் சுயநிர்ணய உரிமையை தமிழக சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அங்கீகரிக்க வேண்டு மென்ற ஏகோபித்த கோரிக்கையை முன்வைத்து ஒரு விண்ணப்பத்தினை தமிழகத்தில் இருக்கும் அரசியற் கட்சிகள் தலைவர்கள், பிரதான ஊடகங்கள் ஆகியவற்றிக்கு அனுப்புதல்.
இதில் இதுவரையிலும் இணைந்து கொள்ளாத அமைப்புகள், சங்கங்கள் கீழ்வரும் தொலைபேசி எண்ணிலும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெறவும்.
கனடிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு
தொலைபேசி: 416-286-1307
மின்னஞ்சல்: tamilcotac@gmail.com
http://www.tamilcotac.tk/
No comments:
Post a Comment